விளையாட்டு
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் பிடே கிராண்ட் சுவிஸ் சதுரங்கப் போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார், தமிழ்நாட்டின் வைசாலி.
இதன் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான பெண்கள் போட்டியாளராகவும் இடம் பிடித்துள்ளார்.
வைசாலி முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டிலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். இரண்டாம் ஆண்டாக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
ஏற்கெனவே இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் பிடே சதுரங்கப் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மூன்றாவதாக வைசாலி வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், வைசாலியின் இந்த வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.