Tamilnadu fishermen saved by srilankan navy in kachatheevu
இலங்கைக் கடற்படையால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள்

2 மீனவர்கள் இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைப்பு!

Published on

இராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவினர் இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடந்த செவ்வாயன்று காலையில் படகு கவிழ்ந்து மூழ்கியது. அதில் இருந்த நான்கு மீனவர்களில் இரண்டு பேர் மாயமாகினர். இருவர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் சுற்றுக்காவலாக இலங்கைக் கடற்படையினர் சென்றபோது தத்தளித்த இரு மீனவர்களையும் காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர். 

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்கள் குறிகட்டுவான் காவல்நிலையத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

நேற்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

பலாலியிலிருந்து அவர்களை விமானம் மூலம் தமிழகத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com