இரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அதிபர்
இரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அதிபர்

ராஜபக்சே கட்சியை சலசலக்க வைத்த ரணில் - 92 எம்.பி.கள் ஆதரவு!

Published on

இலங்கை அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்த தற்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கே, தமிழர், சிங்களர் தரப்புகளின் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் திரட்டிவருகிறார். பொதுவாக ஈழத்தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எட்டிக்கூடப் பார்க்காத அவர், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அடிக்கடி அங்கு பயணம் மேற்கொண்டுவருகிறார். அதிலும் குறிப்பாக பிரதமராக இருக்கும் தினேஷ் குணவர்த்தனாவை எல்லாம் ஈழத்தமிழர்கள் தங்கள் ஊருக்கு வருவார் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இது ஒரு புறம் இருக்க, சிங்களத் தரப்பில்தான் இதுவரை அதிபர் தேர்தலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மூன்று வேட்பாளர்களுமே இருப்பதால், அவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரணிலைப் போலவே மற்ற இருவரான சஜித்தும் அனுரகுமாரவும் தமிழ் மக்களின் வாக்குகளை வெல்வதற்காக வடகிழக்குப் பகுதிக்கு அடிக்கடி சென்றுவருகின்றனர்.

ஆனால், சிங்களத் தரப்பில் யார் அதிக செல்வாக்கைப் பெறுவது என்பதுதான் முடிவைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

தற்போது, பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்த ஒரு அமைச்சரவை இருக்கும்நிலையில், பிரதமர் தினேஷ் குணர்வர்த்தனா உட்பட 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரணில் விக்கிரமசிங்கேவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் அதிபரும் பிரதமருமான மகிந்த இராஜபக்சேவின் இலங்கை பொது மக்கள் முன்னணியைச் சேர்ந்த தேசிய, மாவட்ட நிலைத் தலைவர்கள் ஆவர்.

அவர்கள் மீது இராஜபக்சேக்களின் நடவடிக்கை பாயுமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com