ஆ...வேட்பாளர் கூடுதலாகச் செலவழித்தால் குடியுரிமை பறிப்பு!
இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூடுதலாகச் செலவழித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூடுதலாகச் செலவழித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான தொகையைச் செலவிடக்கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறீரத்நாயக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் முடிந்து 21 நாள்களுக்குள் வேட்பாளர்கள் தங்களின் செலவு குறித்து முழுமையான அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும். அவற்றை ஆணைக்குழு ஊடகங்கள் மூலம் வெளியிடும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தத் தகவல்களில் தவறு இருந்தால் பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரத்நாயக்கா கூறினார்.
தவறிழைக்கும் வேட்பாளர்கள் தங்கள் பதவியை இழக்க நேரும்; குடியுரிமை பறிக்கப்படவும்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.