இலங்கை
இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.
வரும் நவம்பர் 14ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கா உத்தரப்பின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் அக்டோபர் நான்காம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் புதிய பத்தாவது நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் தேதி கூட்டப்படும் என்றும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கா தெரிவித்துள்ளார்.