டி.வி. நிகழ்ச்சியில் அடித்துக்கொண்ட தமிழ் எம்.பி.கள்!

tamil mps melee in lankan tv show
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது மலையகத் தமிழ் எம்.பி.களிடையே மோதல்
Published on

இலங்கை அதிபர் தேர்தல் பிரச்சாரப் பரபரப்புக்கு இடையே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரு தமிழ் எம்.பி.கள் அடித்துக்கொண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈழத்தமிழர்களின் தாயகப் பகுதியான வட-கிழக்கு இலங்கையின் அரசியல் ஒரு வகையாக இருக்க, மலையத் தமிழர் கட்சிகளின் அரசியல் வேறு வகையாக இருக்கும். குறிப்பாக, கொழும்புமைய அரசியலாக மலையகத் தமிழர் கட்சிகள் செயல்படுவது வழக்கம். 

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மூலம் எம்.பி. ஆனவர்கள் பழனி திகாம்பரம் (நுவரெலியா தேர்தல் மாவட்டம்), வேலுகுமார் (கண்டி மாவட்டம்) ஆகியோர்.

இவர்களில் வேலுகுமார் இந்த முறை அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிக்க முடிவுசெய்தார். இந்த நிலையில் கொழும்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் நேற்று பேசினர். அப்போது, திகாம்பரம் திடீரென வேலுகுமார் மீது தாக்குதல் நடத்தினார். குமாரும் பதிலுக்குத் தாக்கினார். 

ஊடக நிகழ்ச்சியில் இப்படி நடந்துகொண்டது மிக மோசமான சம்பவம் என அரசியல் தளத்தில் கடுமையாகச் சாடப்படுகிறது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com