விருப்பு வாக்கு... இலங்கை அதிபர் தேர்தலில் எப்படி தெரியுமா?
இலங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் விருப்ப வாக்கு என்கிற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது பற்றி அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் மூன்று பேருக்கும் மேல் போட்டியிடுவதால், ஒரு வேட்பாளருக்கு வாக்கையும் மற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கையும் இடலாம்.
விருப்பமான வேட்பாளரின் பெயர், சின்னத்துக்கு நேராக உள்ள கட்டத்தில் 1 என எண்ணைப் பதியவேண்டும்.
இரண்டாவதாக எந்த வேட்பாளருக்கு விருப்பு வாக்கு செலுத்த விருப்பமோ அவருடைய பெயருக்கு நேராக 2 என எண்ணைப் பதியவேண்டும்.
அடுத்ததாக விருப்புவாக்கு செலுத்த விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக 3 எனப் பதியவேண்டும்.
இத்துடன், நிராகரிக்கப்படக்கூடிய வாக்குகளைப் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடாவிட்டால் அது செல்லாத வாக்கு ஆகிவிடும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அடையாளமிட்டாலும், ஒரு வேட்பாளருக்கு 1 என்றும் இன்னொருவருக்கு எக்ஸ் அடையாளமும் இட்டாலும்,
விருப்புவாக்குப் பதிவுகளை மட்டும் இட்டிருந்தாலும், வாக்காளரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடியபடி ஏதேனும் ஒன்று எழுதப்பட்டிருந்தாலும் வரையப்பட்டிருந்தாலும்
1-ஐத் தவிர்த்து வேறு அடையாளத்துடன் 2,3 விருப்புவாக்கு அடையாளமிட்டிருந்தாலும், 1,2,3-ஐத் தவிர்த்து வாக்கு, விருப்புவாக்குக்கு வேறு அடையாளம் இட்டிருந்தாலும்
அந்த வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.