இலங்கை
ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ஐஆர்ஐஎஸ் டேனா எனும் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இன்று காலையில் விபத்துக்கு உள்ளானது. அதில் பயணித்த 180 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின.
பின்னர் காலை 6 மணியளவில் இலங்கைக் கடற்படை, விமானப் படைகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தம் 180 பேர் அந்தக் கப்பலில் இருப்பதாகவும் அவர்களில் 30 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காலியில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மருத்துவமனையின் இயக்குநர் இரங்கா இதை உறுதிப்படுத்தியுள்ளார்.