இந்தியாவைப் போலவே இலங்கையிலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 277 யானைகள் அங்கு இறந்துள்ளன.
பருவநிலை தப்புதலால் உணவு கிடைக்காமல் வனப்பகுதியிலிருந்து மக்கள் குடியிருப்புகளுக்கு விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது. மேலும், வனப்பகுதிகளுக்குள் மனிதர்கள் குடியிருப்புகள், பிற கட்டுமானங்களை அமைப்பதும் வன விலங்குகளுக்கு தொல்லையாக இருந்துவருகிறது.
இந்நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு 488 யானைகள் உயிரிழந்துள்ளன.
பெரும்பாலானவை விவசாய நிலங்களில் புகுந்தபோது அங்கு பயிர்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துபோயுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தடுக்க, பயிர்நிலத்தில் சட்டவிரோதமாகப் பொருத்தப்படும் மின்கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வன உயிரினப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.