இலங்கை அம்பாந்தோட்டையில் பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலை அமைக்க சீனம், இலங்கை உடன்பாடு
இலங்கை அம்பாந்தோட்டையில் பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலை அமைக்க சீனம், இலங்கை உடன்பாடு

இராஜபக்சே ஊரில் சீனா 3.7 பில்லியன் டாலர் சுத்திகரிப்பு ஆலை!

Published on

இலங்கையில் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் மகிந்த இராஜபக்சே, கோட்டாபய இராஜபக்சே ஆகியோரின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் சீனாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை அமையவுள்ளது. 

நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் பீப்பாய்கள் சுத்திகரிப்புத் திறன் கொண்ட இந்த ஆலையை அமைக்க, சீன நாட்டின் சைனோபெக் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனம் முதலீடு செய்கிறது. 

இதற்கான உடன்பாடு இன்று சீனாவில் கையெழுத்தானது. 

இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் கையெழுத்திட்டார். 

இதன்படி, அம்பாந்தோட்டை ஆலையில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, அதன்மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி பெருக்கப்படும் என்று இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com