இராஜபக்சே மனைவி கைது- ஊழல் வழக்கில் நடவடிக்கை!

Published on: 

இலங்கை அரசின் முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சேவின் மனைவி சிராந்தி இராஜபக்சே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அரசு வங்கியின் நிதியைப் பெற்று தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது அந்நாட்டின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு பதிந்துள்ளது. 

முன்னதாக, வெளிநாட்டுக்குச் சென்று கடந்த வாரம் இலங்கைக்குத் திரும்பியிருந்த அவரை, வரும் 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருமாறு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு உத்தரவிட்டிருந்தது. 

அதற்கு முன்னரே, அவரை நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று கொழும்பில் உள்ள அவரின் வீட்டில் விசாரித்தனர். 

அதைத் தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டு, வரும் 13ஆம் தேதிவரை தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 

சிரிலிய சவிய எனும் நலன்புரி அமைப்பு மூலம் அவர் 1 கோடி ரூபாய் நிதியைப் பெற்றதாகவும் அதை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில், இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com