இலங்கை மீனவர்கள் சிலரை கடந்த வாரம் கடலில் வைத்து இந்தியக் கடற்படையினர் தாக்கியதாக அந்நாட்டுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
வடக்கு மாகாணத் தமிழ் மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது.
ஆனால், இந்தியக் கடற்படையாலோ கடலோரக் காவல்படையாலோ இலங்கை மீனவர்கள் யாரும் தாக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தங்கள் தரப்பில் இலங்கை மீனவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் மனிதாபிமான அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்துவருவதாகவும் இந்தியத் தூதரகத்தின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.