jalani premadasa
ஜலானி பிரேமதாசா

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக மனைவியும் களத்தில்..!

Published on

அடுத்த பத்தாவது நாளில் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக அவரின் மனைவி ஜலானியும் களத்தில் குதித்துள்ளார். 

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் ஜலானி கலந்துகொண்ட பல கூட்டங்கள் நடைபெற்றன. நேற்றைய கூட்டத்தில் அவருடன் முன்னாள் அமைச்சர் பீரிசும்  பங்கேற்றார். 

யாழ்ப்பாணத்திலும் சுன்னாகத்திலும் சஜித்துக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 

மேலும், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பெண்கள் சந்திப்பும் பொதுக்கூட்டமும் நடைபெற்றன. இவற்றிலும் ஜலானி கலந்துகொண்டார். 

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com