ஜனாதிபதியின் தாயார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

ஜனாதிபதியின் தாயார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
Published on

மாநில அமைச்சர்கள் அளவுக்கான பதவிகளில் இருப்பவர்களே அதிக கட்டண தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய சூழலில், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்காவின் தாயார் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

முதுமை நலிவு காரணமாக, அனுரகுமாராவின் தாயார் அனுராதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அனுரகுமாரா நேற்று தன் தாயாரை அங்கு சென்று பார்த்தார்.

அந்த நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களேகூட தனியார் சிகிச்சையைப் பயன்படுத்தும்நிலையில், அரசின் அதிபராக உள்ளவரின் தாயார் இப்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை இலங்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

சொல்லொன்று செயலொன்றாக இல்லாமல் அதிபர் திசநாயக்கா சரியாகச் செயல்படுவதாக சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com