இலங்கை
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன் சார்பில் அசோக் ரண்வல தன் டாக்டர் பட்டத்தில் மோசடி செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அவர் பதவிவிலகினார்.
அதையடுத்து, இன்று காலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடியபோது ஜகத் விக்கிரமரத்தினாவை புதிய அவைத்தலைவராகத் தேர்வுசெய்தனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரியா அவரின் பெயரை முன்மொழிய, அவையின் முதல்வர் பிமல் ரத்நாயக்க அதை வழிமொழிந்தார்.
முறைப்படி அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, பிரதமரும் முதல்வரும் அவரின் இருக்கைக்கு அழைத்துச்சென்றனர்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட பல தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.