சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக, விரைவாக சென்றடைய 4 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும்போது மக்களிடம் குறைகள் தொடர்பான மனுவை முதல்வர் பெற்றுள்ளார்.
அதுபோல, மக்களின் குறைகளை கேட்டறிய, 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளைப் பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களிடையே விரைவாகச் செல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைக்கிறார். மக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 1 கோடியே 1 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா தெரிவித்துளள்ர்.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாள்களில் தீர்வு காணப்படும். உரிய ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்துக்கு வந்தால், உடனடியாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும்.
முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் நான்கு நாள்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.