அற்புதம்மாள்
அற்புதம்மாள்

‘ஜாதி,மதம் கடந்த ஆதரவு’ – உணர்ச்சிகரமாக பேசிய அற்புதம்மாள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்து உதவிய திருநெல்வேலியைச் சோ்ந்தவா்களைச் சந்தித்து அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.

இதையொட்டி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது: எனது மகன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஒரு சாமனிய அம்மா ஒரு பிள்ளைக்காக போராடுகிறார் என்பதை உணர்ந்து எல்லோரும் எனக்கு ஆதரவு அளித்தார்கள். ஊடகத்தினரும் அதை தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.

உலகிலேயே யாருக்கும் கிடைக்காத மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. எந்த ஊருக்கு என்றாலும், ‘அம்மா நல்லாருக்கீங்களா’ என்று கேட்கக் கூடிய அளவுக்கு ஆதரவுக்கு இருக்கிறது.

ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைக் கடந்து எனது மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சியினர் உள்பட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com