தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருவோருக்கும் அமைப்பிற்கும் தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில் 2023ஆம் ஆண்டிற்கான விருதுகளை, தமிழ் வளர்ச்சி- செய்தித் துறை அமைச்சர்
சாமிநாதன் வழங்கினார்.
தமிழ்த்தாய் விருது - தென்காசித் திருவள்ளுவர் கழகம்,
கபிலர் விருது – கவிஞர் முத்தரசன் (வயது – 75, பெரம்பலூர் மாவட்டம்),
உ.வே.சா விருது - முனைவர் ஆ.இராமநாதன் (வயது – 73, சென்னை மாவட்டம்),
கம்பர் விருது - முனைவர் ம.பெ.சீனிவாசன் (வயது – 81, மதுரை மாவட்டம்),
சொல்லின் செல்வர் விருது - முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா (வயது – 53, சென்னை மாவட்டம்),
உமறுப்புலவர் விருது – தா.சையது காதர் ஹீசைன் (வயது – 81, தஞ்சாவூர் மாவட்டம்),
ஜி.யு.போப் விருது – முனைவர் வெ.முருகன் (வயது– 73, சென்னை மாவட்டம்),
இளங்கோவடிகள் விருது - முனைவர் சிலம்பு நா.செல்வராசு (வயது – 68, புதுச்சேரி),
அம்மா இலக்கிய விருது – முனைவர் சரளா இராசகோபாலன் (வயது – 81, சென்னை மாவட்டம்),
சிங்காரவேலர் விருது – மு.சுப்பிரமணி (வயது – 56, தேனி மாவட்டம்),
அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் மு.சச்சிதானந்தம் (வயது – 56, புதுச்சேரி),
மறைமலையடிகளார் விருது – புலவர் இராமலிங்கம் (வயது – 92, சென்னை மாவட்டம்),
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர்
பா.அருள்செல்வி (வயது – 69, கடலூர் மாவட்டம்),
காரைக்கால் அம்மையார் விருது - முனைவர் கி.மஞ்சுளா (வயது – 56, சென்னை மாவட்டம்),
சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது – சட்டக் கதிர் (ஆசிரியர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்),
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – முனைவர் இரா.அகிலன் (வயது – 45, சென்னை மாவட்டம் - சங்க இலக்கிய உருபனியியல் பகுப்பான் மென்பொருள்)
சிறந்த மொழிபெயர்ப்பாளர் 2023ஆம் ஆண்டுக்குரிய பத்து விருதாளர்கள்
பிரபா ஸ்ரீ தேவன் (வயது – 75, சென்னை மாவட்டம்),
சீனி இராச கோபாலன் (வயது – 80, சென்னை மாவட்டம் ),
இந்திரன் (எ) பி.ஜி.இராஜேந்திரன் (வயது -76, சென்னை மாவட்டம்),
அலமேலு கிருஷ்ணன் (வயது – 74, சென்னை மாவட்டம்),
ருத்ர துளசி தாஸ் (எ) இளம் பாரதி (வயது – 90, சென்னை மாவட்டம்),
பேராசிரியர் க.முத்துச்சாமி (வயது -79, சிவகங்கை மாவட்டம்),
நடராஜன் முருகையன் (வயது – 83, சென்னை மவாட்டம்),
நிர்மால்யா (எ) எஸ்.மணி (வயது – 62, நீலகிரி மாவட்டம்),
இ.பா.சிந்தன் (வயது – 41, சென்னை மாவட்டம்),
கௌரி கிருபானந்தன் – (வயது – 67, சென்னை மாவட்டம்).
விருதாளர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று விருதுகளை வழங்கினார்.
தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்புக்கு ரூ.5 இலட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையும்,
சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது பெறும் விருதாளருக்கு ரூ.2.00 இலட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையும்,
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினை பெறும் 10 விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.00 இலட்சம், தகுதியுரை, பொன்னாடையும்,
ஏனைய விருதினை பெறும் விருதாளர்களுக்கு ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியரை, பொன்னாடையும் என 26 விருதாளர்களுக்கு 55 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.