மதுபான முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சரியாக, காலை 9.30 மணிக்கு பேரவைத்தலைவர் அப்பாவு திருக்குறள் வாசிக்க கூட்டம் தொடங்கியது. பின்னர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ரூ.1000 கோடி மதுபான ஊழல் தொடர்பாகவும்,அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாகவும் பேச முயன்றனர். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுகவை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.