தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாஜி, பொன்முடி ஆகியோர் விடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மனோ தங்கராஜ் மீண்டும் பல்வளத்துறை அமைச்சராகலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை காரணமாக செந்தில் பாலாஜியும், சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே இப்போது தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் துறைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, செந்தில் பாலாஜி நிர்வகித்த வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்து வந்த வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது.