நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
சமீப காலமாக, தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் காயம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் காரணமாக, ரேபீஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களும் ஏராளம். ஆண்டுதோறும், லட்சக்கணக்கானவர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தெருநாய்களால் ரேபீஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்யப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும். கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்து ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.