தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தமிழக காவல் துறையில் 3 டிஜிபிக்கள், 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக காவல் துறையில் 3 டிஜிபிக்கள், 3 கூடுதல் டி.ஜி.பி.கள் உட்பட 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடிய இந்த மாற்றங்களுக்கான ஆணையை, மாநில உள்துறைச் செயலர் அமுதா நேற்று வெளியிட்டார்.

பி.கே.ரவி - ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பணியில் உள்ள இவர், மின்சார வாரிய தலைமை விழிப்புப்பணி அதிகாரியாக மாற்றம்.

வன்னியப்பெருமாள் - மின்வாரிய தலைமை விழிப்புப்பணி அதிகாரியாக உள்ள இவர், குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்.

ராஜீவ் குமார் - மத்திய அரசுப் பணியில் இருந்த இவர், தமிழக பணிக்கு மாற்றப்பட்டு காவல் பயிற்சிக் கல்லூரிக்கு நியமனம்.

பால நாகதேவி - சென்னை நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அபின் தினேஷ் மோடக் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாநில குற்ற ஆவணக் காப்பகத்துக்கு மாற்றம்.

வினித் தேவ் வான்கடே - மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., மாநில நிர்வாகப் பிரிவுக்கு மாற்றம்.

சென்னை நவீனமயமாக்கல் ஐ.ஜி. சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பணியில் இருக்கும் பவானீஸ்வரி, மேற்கு மண்டல சரக காவல்துறை தலைவராக மாற்றப்பட்டார். அந்தப் பொறுப்பில் இருந்துவரும் சுதாகர், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தற்கொலை செய்துகொண்ட மேற்கு மண்டல டி.ஐ.ஜி. விஜயகுமாருக்குப் பதிலாக, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி.யான காமினி, திருச்சி காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அப்பொறுப்பிலிருக்கும் சத்யபிரியா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையக கூடுதல் ஆணையர் லோகநாதன், மதுரை ஆணையராக மாற்றப்பட்டார். அப்பொறுப்பில் உள்ள நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். தென் மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றும் அஸ்ரா கார்க், சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அவர் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com