தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

அக்-9இல் சட்டப்பேரவை கூடுகிறது- அப்பாவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் அடுத்த மாதம் 9ஆம்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதைக் கூறினார்.

இந்தக் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 9ஆம் தேதி திங்களன்று காலை 9 மணிக்கு, தலைமைச்செயலகத்தில் உள்ள  சட்டப்பேரவை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று பேரவையின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com