அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மின் கட்டணம் சிறிது குறைப்பு!
பத்து வீடுகளுக்கும் குறைவாக உள்ள அடுக்ககங்களுக்கு பொதுப் பயன்பாட்டுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு சற்று குறைத்துள்ளது.
சென்னையை அடுத்த மறைமலைநகரில், இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் நான்கு மாவட்ட நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
”முதலாவதாக, தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவி ஏற்றவுடன், இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் சாலைப் உள்ள பயன்பாட்டு கைவிடப்பட்டது. செல்வோரும், பெருங்குடி கட்டணம் இதனால், தகவல் கட்டணச் வசூல் இப்பகுதி தொழில்நுட்பத் சாவடியில் செய்வது வழியாக துறையில்பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் கட்டணம் நாவலூரில் உள்ள வசூலிக்கக் கூடாது கட்டண சாவடியிலும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று. நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும்.
இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும்பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனைப் பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப்பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும்.”என்று முதலமைச்சர் கூறினார்.