தமிழ் நாடு
அடுத்த 4 நாட்களில் வெயில் சுட்டெரிக்கும்!
வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய அதி தீவிர “மோக்கா” புயல் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.