எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

அண்ணாமலையால்தான் கூட்டணியில் பிளவு- வேலுமணி

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையால்தான் அக்கட்சியுடனான கூட்டணியில் பிளவு உண்டானது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 

கோவையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார். 

தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் பா.ஜ.க.வில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தவரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது; அண்ணாமலை வந்தபிறகுதான் அதிகமாகப் பேசிவிட்டார்; அண்ணாவைப் பற்றி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரைப் பற்றியெல்லாம் அவர் பேசியது தவறு என்று வேலுமணி கண்டிப்புடன் கூறினார்.

இரு கட்சிகளும் சேர்ந்து நின்றிருந்தால் 30 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும் அவர் சொன்னார். 

அ.தி.மு.க. மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டதே எனக் கேட்டதற்கு, இரண்டாம் இடத்தில் வந்த அண்ணாமலை, பா.ஜ.க.வின் முன்னாள் சி.பி.இராதாகிருஷ்ணனைவிடக் குறைவாகத்தான் வாக்குகள் பெற்றுள்ளார் என்றார் வேலுமணி.

logo
Andhimazhai
www.andhimazhai.com