கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு வரும் மக்களவைத் தேர்தலில் அதன் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அணியில் அக்கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கோவையா தென்சென்னையா எந்தத் தொகுதி என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கிருபாகரன், அ.தி.மு.க.வில் சேர்ந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செவ்வந்தி இல்லத்தில் நேற்று (15.2.2024- வியாழன்), மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் கிருபாகரன் சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.