ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. கொடி, சின்னம்- ஓ.பன்னீருக்கு தடை தொடரும்!

அ.தி.மு.க. கொடி, சின்னம், பெயரைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கு தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 முன்னதாக அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை  பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிப்பதாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதை எதிர்த்து ஓ பன்னீர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது அபீக் அமர்வு தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து தனி நீதிபதியிடம் மனு செய்யவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com