எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அமலாக்கத் துறை அதிகாரி கைது- எடப்பாடி, அண்ணாமலை கருத்து!

மோசடித்தனமாக இலஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி விவகாரம் பற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தம் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிப்பது, எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை மறுப்பது, பொது வாழ்வில் இருப்பவர்கள் மீது வழக்குப் போட்டு அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது என அதிகார அத்துமீறலில் மைய பா.ஜ.க. அரசு ஜனநாயகவிரோதமாகச் செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தமிழகத் தலைவர் அழகிரி, “ மத்திய புலனாய்வுத் துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவை கூட்டணி சேர்ந்து மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கண்காணிப்பில் தமிழக அரசுக்கு எதிரான சீர்குலைவு நடவடிக்கைகளைச் செய்துவருகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார். 

பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலையோ, ”தனிநபர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத் துறை மீது தவறு சொல்லமுடியாது. யார் தவறுசெய்தார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தவறில்லை.” என்று கூறினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com