அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி, அமலாக்கத் துறையின் சென்னை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த 2006 - 2011 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கனிம வள- சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பதவிவகித்தார். அவருடைய மகன் கௌதம் சிகாமணி, உறவினர்கள் செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணைக் கூடுதலாக எடுத்தனர் என்று வழக்கு பதியப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி அவருக்குத் தொடர்புடைய இடங்களில் தேடுதல் சோதனையும் நடத்தியது. பின்னர் அன்றிரவு அமைச்சர் பொன்முடியிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

அந்தத் தேடுதல் சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவை உறுப்பினரும் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று 30ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு பொன்முடிக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது. அதன்படி அவர் விசாரணையில் முன்னிலையானார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com