தமிழ் நாடு
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தி.மு.க.வின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்துவந்த நிலையில், அவரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக திண்டிவனத்தில் வசிக்கும் டாக்டர் சேகர் தி.மு.க. வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதைப் போல, மறைந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் புகழேந்தி வகித்துவந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவி காலியாக இருப்பதால், மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் ஏற்கெனவே உள்ள நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்கி பணியாற்ற வேண்டும் என துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.