அரசுப் பேருந்துகளைப் பற்றிய புகார் உதவிமைய எண் இனி 149!

அரசுப் பேருந்துகளைப் பற்றிய புகார் உதவிமைய எண் இனி 149!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண் இனி 149 என எளிமையாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் “1800 599 1500” என்ற 11 இலக்க எண் வசதியை, கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் தொடங்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்துவருகிறது.

பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பல தரப்பினரும் அரசுக்கு புகார்களை அனுப்பினர். அப்படியான புகார்களைப் பரிசீலித்த போக்குவரத்துத் துறை, மாற்றம் செய்துள்ளது.

நாளை 10ஆம் தேதி முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் -149 வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணில் இனி பயணிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com