அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

அரசுப் பேருந்துக்கு தனியார் ஊழியர்- ரத்துசெய்த நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் தனியார் ஓட்டுநர், நடத்துநரை நியமிக்க அரசு முடிவுசெய்தது. தொடர் இழப்பைச் சரிக்கட்டவே என அரசுத் தரப்பில் காரணம் கூறப்பட்டது. இதற்காக தனியார் மூலம் ஒப்பந்த அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பேருந்து ஊழியர் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஹேமலதா, அரசின் இந்த முடிவு அபாயகரமான சோதனை எனக் கூறி ஒப்பந்த அறிவிக்கையை ரத்து செய்தார். தனியார் மூலம் நியமனம் செய்தால் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாது என்றும் சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்வு மூலமே பேருந்து ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.   

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com