கோதண்டபாணி
கோதண்டபாணி

அரசு பேருந்து ஏலத்தில் லட்சணக்கில் பணத்தை சுருட்டிய அதிகாரிக்கு 383 ஆண்டுகள் சிறை!

அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் செய்யும் ஊழல் முறைகேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் செய்யும் முறைகேடுகள் அம்பலமாவதும், அதில் அவர்கள் தண்டனை பெறுவதும் அவ்வளவு எளிதானதல்ல. அப்படி ஒரு வழக்கு தான் இது.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு போக்குவரத்து கழகம் உள்ளது. இங்கு ஓடாத நிலையில் இருந்த 55 பேருந்துகளை ஏலம் விட்டப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து 28 லட்சத்து 20 ஆயிரத்து 94 ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக, போக்குவரத்துக் கழகத்தின் பொதுமேலாளர் ரங்கசாமி என்பவர் கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார், 1988 ஆம் ஆண்டு.

பின்னர் இது தொடபான இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணி, ராமச்சந்திரன், நாகராஜன், நடராஜன் என்ற கண்ணன், முருகநாதன், துரைசாமி, ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை நடந்தநிலையில், ராமச்சந்திரன், நடராஜன், ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 4 பேர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்கள். 55 பஸ்களில் 47 பஸ்களை ஏலம்விட்டதில் கோதண்டபாணி, நாகராஜன், முருகநாதன், துரைசாமி ஆகிய 4 பேர் மீது மட்டும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் நடைபெற்றது. 31 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணிக்கு தண்டனை விதித்தும், நாகராஜன், முருகநாதன், துரைசாமி ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி, ரூ. 3 கோடியே 32 லட்சம் அபராதமும் 383 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கோதண்டபாணிக்கு 82 வயதாவதால், 7 ஆண்டுகள் மட்டும் கோதண்டபாணி சிறை தண்டனை அனுபவிப்பார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் ஆனார். அவர் கூறும்போது, இந்த வழக்கில் 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. மேலும் பேருந்துகளின் உதிரிபாகங்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்க கூடிய தொகையை அரசு போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தவும் நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com