தமிழ் நாடு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம்தேதி நடைபெற்றது. அப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட நா.த. கட்சியின் தலைவர் சீமான், அருந்ததியர் சமூகத்தினரைப் பற்றி குறிப்பிட்ட சில வாசகங்கள் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகின. குறிப்பாக, அருந்தியர்களை துப்புரவுத் தொழிலுக்காக ஆந்திராவிலிருந்து அழைத்துவந்ததாக அவர் கூறியிருந்தார். அது தவறு என்றும் தமிழ்நாட்டை அருந்ததியர் சமூகத்தினர் ஒரு காலத்தில் ஆண்டது பற்றி கல்வெட்டுக் குறிப்புகளே இருக்கின்றன என்றும் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, கருங்கல்பாளையம் காவல்நிலையத்தினர் சீமான் மீது வழக்கு பதிந்தனர். ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கு விசாரணையில் சீமான் இன்று காலையில் முன்னிலையானார்.