தமிழ் நாடு
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு நாளை 7ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. புயல் பாதிப்பால் சென்னை, அதைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களில் மட்டும் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக கல்வித் துறை அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பு இப்போது மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”ஏற்கெனவே அறிவித்த கால அட்டவணைப்படி வரும் 11ஆம் தேதி முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் அதே பாடத் தேர்வுகள் நடைபெறும்.” என்றும்,
7ஆம், 8ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் மட்டும் 14, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும்
இதன் மூலம், முன்னர் அறிவித்தபடி சென்னை உட்பட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிக்கும் சிரமம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.