அரசுச் செயலாளருக்கே ஆம்புலன்ஸ் வரவில்லை... அரை மணி நேரம் தவிப்பு!

அரசுச் செயலாளருக்கே ஆம்புலன்ஸ் வரவில்லை... அரை மணி நேரம் தவிப்பு!

அடிபட்டதன் உதவியாளரை மருத்துவமனையில் சேர்க்க அவசரஊர்தி கிடைக்காமல் சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் அவதியை எதிர்கொண்டார். 

சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கான முதலமைச்சரின் நிதியுதவியை அளிக்க மாநகராட்சி ஆணையரும் முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இராதாகிருஷ்ணன், மேயர் பிரியா உட்பட பலரும் சென்றனர். 

அப்போது, இராதாகிருஷ்ணன் காரிலிருந்து இறங்கியபோது விரைவாகக் கதவைத் திறந்ததில் வெளியே இருந்த உதவியாளர் இராமன் தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். உடனே இராதாகிருஷ்ணன் அவரை தன் காரில் கூட்டிச்சென்று அருகில் உள்ள மாநகராட்சி 24 மணி நேர மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அங்கு மருத்துவர் இல்லை. 

வேறு வழியின்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர் சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடிவுசெய்து அவசர ஊர்திக்கு 108 உதவி எண்ணுக்கு அழைத்தார். ஆனால் நேரமாகியும் அவசர ஊர்தியும் வரவில்லை. 

இரண்டாவது முறையாகத் தொடர்புகொண்ட போது இடம் தெரியவில்லை என பதில் வந்துள்ளது. அவருடன் இருந்த சட்டமன்ற, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பேசியும் இதே கதைதான்!

அரை மணி நேரம் ஆகியும் அவசர ஊர்தி வராததால், மூன்றாவது முறையாக ஆணையர் மீண்டும் சொல்ல... அடுத்தடுத்து இரண்டு அவசர ஊர்திகள் அங்கு வந்தன. அதில் ஒன்றில் காயம்பட்ட ஊழியர் இராமன் கூட்டிச்செல்லப்பட்டார். 

அங்கிருந்த பொதுமக்கள், ஒரு இலட்சம் பேர் வசிக்கும் இந்தப் பகுதியில் உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த நிலை என்றால், எங்களுக்கு எப்படி இருக்கும் என முறையிட்டனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com