ஆளுநர் மாளிகை முன்பு பாட்டில் வீச்சு
ஆளுநர் மாளிகை முன்பு பாட்டில் வீச்சு

ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல்- போலீசில் து.செயலாளர் புகார்!

ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட நிலையில், ஆளுநரின் துணைச்செயலாளர் பெயரில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்வகையில் பல சம்பவங்கள் நடந்துவருவதாகவும் நேற்றைய சம்பவம் மாநிலத்தின் உயர் அதிகாரப் பதவியில் உள்ளவரின் பாதுகாப்பு சீர்குலைந்துபோய் இருப்பதைக் காட்டுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல் பாட்டில் வீச்சு தொடர்பாக தீவிரமாக எடுத்துக்கொண்டு முறையான தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சதிகாரர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என்றும் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பைத் தரவேண்டும் என்றும் ஆளுநரின் துணைச்செயலாளர் டாக்டர் டி. செங்கோட்டையன் காவல்துறைத் தலைவருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com