ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டில் வீச்சு- பழைய குற்றவாளி கைது!

சென்னை, கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாளிகைக்கு எதிராக உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகப் பக்கமிருந்து வினோத் என்பவர் பிற்பகல் 3 மணியளவில் இந்த பாட்டிலை வீசியுள்ளார். அதைப் பார்த்த ஆளுநர் மாளிகைக்கு முன்பிருந்த காவலர்கள், அவரைச் சூழ்ந்து பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பாட்டில் உடைந்துவிட்டது. கைதானவர் கருக்கா வினோத், சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சி அலுவலகத்தின் முன்பாக இப்படி பாட்டில் வீசியவர் என்றும் அதற்கு முன்னர் காவல்நிலையத்தின் முன்பாகவும் பாட்டில் வீசினார் என்றும் சென்னை தெற்கு காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார். 

அவர் இயல்புநிலைக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.  

கைதானவரிடமிருந்து மூன்று பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

இவர் மீது ஏழு வழக்குகள் உள்ளன என்றும் அண்மையில் சிறையிலிருந்து வெளியானவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com