சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66ஆவது நினைவு நாளை முன்னிட்டு, உதயநிதி உட்பட்ட அமைச்சர்கள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி- செல்லூரில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில், இன்று காலை அமைச்சர்கள் ராஜ கண்ண்ணப்பன், பெரியகருப்பன், மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் அமைச்சர் தமிழரசி உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலியில் பங்கேற்றனர்.
பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ” சமூக நீதிப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்தினோம். அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு, அவருடைய குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். அவர் எதற்காகப் போராடினாரோ அதாவது சமூக நீதிக்காகப் போராடினாரோ அதைப்போல நாம் அனைவரும் சமூகநீதிக்காகப் போராடவேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறினார்.