நாகை – இலங்கை கப்பல் சேவை
நாகை – இலங்கை கப்பல் சேவை

இலங்கைக் கப்பல் பயணிகள் குறைவு - 20ஆம் தேதியுடன் நிறுத்தம்!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்தபடி வரவில்லை.

கடந்த 14ஆம்தேதியன்றுதொடங்கப்பட்ட இந்தச் சேவையில் முதல் நாளன்று இங்கிருந்து 55 பயணிகளுடன் முதல் பயணம் இருந்தது. அடுத்த சவாரி 16ஆம்தேதி மேற்கொள்ளப்பட்டபோது 15 பயணிகள் மட்டுமே தமிழகத்திலிருந்து சென்றனர்.

நேற்று சற்று கூடுதலாக 23 பேர் இலங்கைக்குப் பயணித்தனர். இங்கிருந்து செல்பவர்களைவிட இலங்கையிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை பொதுவாக அதிகமாக இருக்கிறது.

வடகிழக்குப் பருவழமழையை முன்னிட்டு வரும் 24ஆம் தேதிவரை இயக்கப்பட்டு, பிறகு மீண்டும் ஜனவரி முதல் படகுசேவை தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இம்மாதம் 23ஆம் தேதியே பருவமழை தொடங்கும் என வானிலைத் துறை அறிவித்துள்ளதால், நாளை 20ஆம் தேதியுடன் நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com