இளைஞர் மரணம்: சென்னை மருத்துவமனையை மூட மருத்துவத் துறை உத்தரவு!

புதுச்சேரி ஹேமச்சந்திரன்
புதுச்சேரி ஹேமச்சந்திரன்
Published on

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் எடைக் குறைப்புச் சிகிச்சை பெற்றபோது மாரடைப்பால் மரணமடைந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டு அரசு மருத்துவத் துறை விசாரணை நடத்தியது. அதன்படி அந்த மருத்துவமனை மீதும் மருத்துவர் ஒருவர் மீதும் தொழில்நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவத் துறை பரிந்துரைத்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

“ கடந்த (12.04.2023) அன்று பாண்டிச்சேரியை சார்ந்த திரு.செல்வநாதன் என்பவரின் மகன் S.ஹேமச்சந்திரன் (வயது 26) என்பவருக்கு உடல்பருமன் சிகிச்சைக்காக (Weight – 145.5 kg, Height – 166 cm, BMI – 52.8 kg/m2) மரு.T.பெருங்கோ அவர்களை Dr.Rela மருத்துவமனையில் சந்தித்து ஆலோசனை பெற்று, Lap. Gastric bypass Surgery மற்றும் Diet Chart அறிவுரை மரு.T.பெருங்கோ அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. பிறகு 1 வருடம் கழித்து 06.04.2024 அன்று நோயாளி மீண்டும் மரு.T.பெருங்கோ அவர்களை Dr.Rela மருத்துவமனையில் அதே சிகிச்சைக்காக சந்தித்து ஆலோசனை பெற்று, மேல்குறிப்பிட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் Dr.Rela மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேற்கூறிய அறுவை சிகிச்சையை Dr.Rela மருத்துவமனையில் செய்ய 6 முதல் 8 இலட்சம் பணம் செலவாகும் என்று மரு.T.பெருங்கோ நோயாளியிடமும், நோயாளியின் உறவினர்களிடமும் கூறியுள்ளார். எங்களிடம் அவ்வளவு பணவசதி இல்லை என்று அவர்கள் கூறியதும், மரு.T.பெருங்கோ என்பவர் வெளியில் பம்மலில் உள்ள B.P. Jain மருத்துவமனையில் இதே அறுவை சிகிச்சையை செய்தால் 3 முதல் 4 இலட்சம் வரை தான் செலவழியும் என்று அவர்களிடம் கூறி உள்ளார். மேலும், Dr.Rela மருத்துவமனையில் உள்ளது போல் அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சை வசதிகள் அனைத்தும் இதே மருத்துவமனையிலும் உள்ளது என்று கூறி அவர்களை B.P.Jain மருத்துவமனைக்குச் சென்று உள்நோயளியாக சேரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 21.04.2024 அன்று காலை 11.15 மணியளவில் B.P.Jain மருத்துவமனையில் ஹேமச்சந்திரன் (வயது 26) உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 22.04.2024 அன்று காலை 8.45 மணியளவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டு மரு.T.பெருங்கோ அவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது காலை 9.45 மணியளவில் நோயாளிக்கு திடீரென இதயத்துடிப்பு நின்றதால் (Cardiac Arrest) அதற்கான High end equipments (ECMO) மற்றும் உரிய மருத்துவர்கள் B.P.Jain மருத்துவமனையில் இல்லாததால் Cardiac arrest-க்கான முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 1 மணிநேரம் தாமதமாக 22.04.2024 அன்று காலை 11.35 மணியளவில் Dr.Rela மருத்துவமனைக்கு நோயாளி மாற்றப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, Dr.Rela மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் உடல்நிலை முன்னேற்றம் அடையாததால், VA-ECMO என்ற உயிர்காக்கும் கருவி 22.04.2024 அன்று மாலை 6.10 மணியளவில் பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பிறகு நோயாளிக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏதும் இன்றி உடல்நிலை மிகவும் குன்றி சிகிச்சை பலனின்றி 23.04.2024 அன்று இரவு 9.05 மணியளவில் நோயாளி இறந்துள்ளார்.

இந்நிகழ்வில், நோயாளியின் பெற்றொர் அளித்த புகாரின் பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.R.இளங்கோ மகேஸ்வரன், MS.,DCH., அவர்களின் அறிவுரையின்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) அவர்களின் தலைமையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் (ஆய்வு) மற்றும் இணை இயக்குநர்  (நலப்பணிகள்) செங்கல்பட்டு மாவட்டம் அவர்களுடன் மருத்துவ ஆய்வுக்குழுவானது 03.05.2024 அன்று பம்மல் B.P.Jain மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், நோயாளியின் பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்கு முன், முறையாக ஒப்புதல் படிவம் (Informed Written Consent) பெறப்படவில்லை என்பதும், தகுதியில்லா செவிலியர்களை கொண்டு அறுவை சிகிச்சை அரங்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும், அறுவை சிகிச்சையின் போது ICU மருத்துவர்கள்/General Physician (MD., (GM))/Cardiologist பணியில் இல்லாததும், உயர்தர மருத்துவ உபகரணங்கள் (ECMO) இல்லாததும் மற்றும் நோயாளியை Dr.Rela மருத்துவமனைக்கு காலதாமதமாக மாற்றப்பட்டது முதலான பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்தும்) சட்டம், 1997 விதி 5(2)-ன்படி பம்மல் B.P.Jain மருத்துவமனையின் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்தும்) சட்டம், 2018-ன் படி வழங்கப்பட்ட அனுமதி (TNCEA) சான்றிதழ் தற்காலிகமாக நீக்கம் (Temporary Cancellation) செய்தும் மற்றும் மருத்துவமனையை மூடுவதற்கு Competent Authority / இணை இயக்குநர் (நலப்பணிகள்)  செங்கல்பட்டு மாவட்டம் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிக்கு மருத்துவ வசதிகள் குறைவாகவும், அறுவை சிகிச்சையின் போதோ, அறுவை சிகிச்சைக்கு பின்போ திடீரென்று ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை சரி செயவதற்கான மருத்துவர்கள் இல்லாத இடத்திலும், Un trained, non qualified theatre Staff Nurses வைத்து அறுவை சிகிச்சையை செய்ததாலும் மரு.T.பெருங்கோ அவர்கள் மீதும் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற மருத்துவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு (Tamil Nadu Medical Council) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com