உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி
உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி

உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட வழக்கு!

Published on

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மான நட்ட ஈடு வழக்கு தொடுத்துள்ளார்.

தன்னைப் பற்றி உதயநிதி தவறாகப் பேசிவருவதாகவும் அதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி இன்று தாக்கல்செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, கொடநாடு வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி சனாதனத்துக்கு ஆதரவாகப் பேசியதாக அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பழனிசாமி, தன்னைப் பற்றி இப்படி தவறாகப் பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக உதயநிதி ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடாகத் தர உத்தரவிட வேண்டும் என்றும் பழனிசாமியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com