அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

‘ஊழலை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜக!’ – உதயநிதி தாக்கு!!

மத்திய பாஜக அரசு ஊழலை மறைக்க மொழி – மதம் – கலவரத்தின் பின் ஒளிந்து கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்தவகையில், ஊழலில் மொத்த உருவம் பா.ஜ.க. என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று அவர் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர். ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட ஜி20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com