கே. பாலகிருஷ்ணன்
கே. பாலகிருஷ்ணன்

‘என்ன வேஷம் போட்டாலும் மோடி அரசை இனி மக்கள் நம்பமாட்டார்கள்!’ - கே.பாலகிருஷ்ணன்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை இனி மக்கள் நம்பமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கோரியும், சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாகவும், முறையாகவும் வழங்ககோரி மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சென்னை சென்னை கிண்டி ரயில்நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அதேபோல் மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தற்குப் பதிலாக, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுதற்குப் பதிலாக, மோடி எதையெதையோ பேசி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி என்றால் ஊழல்; ஊழல் என்றால் மோடி. சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பேசாமல், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவது என்று மக்களை திருப்புகிறார். என்ன வேஷம் போட்டாலும், என்ன வித்தை காட்டினாலும் மக்கள் மோடி அரசை இனி நம்பமாட்டார்கள்.

விரைவில் இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்துவதற்கு இந்த மறியல் போராட்டம் தொடக்கமாக இருக்கும். அப்படி வருகிற போராட்டத்தில் மோடி அரசு வீழ்ந்துமடியும் என்பது தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com