அமைச்சர் எல்.முருகனின் வீட்டுப் பொங்கலில் பிரதமர் மோடி
அமைச்சர் எல்.முருகனின் வீட்டுப் பொங்கலில் பிரதமர் மோடி

எல்.முருகன் வீட்டுப் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி!

மைய அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்ஆகியோர் கலந்துகொண்டனர். 

காலை 10 மணியளவில் அமைச்சர் முருகனின் வீட்டில் பொங்கல் விழா தொடங்கியது. அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தமிழ்நாட்டின் பொங்கல் கொண்டாட்டத்தைப் போல தோரணங்களும் கரும்பு, வாழை மரங்களும் கட்டப்பட்டன. சல்லிக்கட்டுக் காளையும் கட்டிவைக்கப்பட்டது. 

வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்ட பானையில் அமைச்சரின் வீட்டார் பொங்கல் வைத்தனர். அங்கிருந்த அனைவருடனும் சேர்ந்து பிரதமர் மோடியும் பொங்கலோ பொங்கல் எனக் கூறியது சுற்றியிருந்தவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. 

விழாவில், பறையாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் என கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com