ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து விபத்து
ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து விபத்து

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து... 4 பேர் உயிரிழந்த துயரம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். ஏற்காடு மலைப் பாதையில் தனியார் பேருந்து ஒன்று இன்று மாலை சென்றுகொண்டிருந்தது. காட்டு ரோடு முனியப்பன் கோயில் அருகே கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி கீழே பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 20 பேர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐந்து மீட்பு, அவசர உதவி வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயம் பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஒரு சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com