தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளைமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான கடைசி தேதி 07.06. 2024
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி : itiadmission2024@gmail.com
அலைபேசி எண் மற்றும் whatsapp எண் : 9499055689
அரசுச் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.