தமிழ் நாடு
காங்கிரஸ்கட்சிக்குள் இழுபறியாக நீடித்து வந்த மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் யார் என்பது ஒரு வழியாக இன்று இரவு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் ஆர். சுதா மயிலாடுதுறை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.