கனமழை- நெல்லை, குமரி, தென்காசி பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை- நெல்லை, குமரி, தென்காசி பள்ளிகளுக்கு விடுமுறை!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் சில நாள்களாகவே பரவலாக மழை பெய்துவருகிறது. குற்றால அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சூழலில் மாவட்டத்தில் நாளை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். 

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டத்திலும் கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டார். 

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com